உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாமில் குவிந்த பொதுமக்கள்

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாமில் குவிந்த பொதுமக்கள்

கரூர்;கரூர் மாவட்டத்தில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி முடிந்து, வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் பெயர் இடம் பெறாதவர்கள், ஆட்சேபனை மற்றும் உரிமை கோரல், வரும் ஜன., 18 வரை தெரிவிக்கலாம் என, அறிவிக்கப்-பட்டது. இதையடுத்து, அனைத்து ஓட்டுச்சாவடி மையங்களிலும் புதிய வாக்காளர் பெயர் சேர்த்தல், திருத்தம், முகவரி மாற்றம், புகைப்-படம் மாற்றம் ஆகியவற்றிற்காக சிறப்பு முகாம் நேற்று நடந்தது. அதில், புதிதாக விண்ணப்பிப்பவர்களும், எஸ்.ஐ.ஆர்.,க்கு முன் வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்து, வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கப்பட்டவர்களும், 'படிவம்-6'-ஐ புகைப்-படத்துடன் பூர்த்தி செய்து வழங்க வேண்டும்.அதில், வயது, முகவரி அடையாள ஆவண நகலை இணைக்க வேண்டும். 2026 ஜன., 1ல், 18 வயது பூர்த்தி செய்பவர்கள் உள்ளிட்ட புதிய வாக்-காளர்கள், வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள், வாக்காளர் அடையாள அட்-டையில் திருத்தம் உள்ளவர்கள் இந்த சிறப்பு முகாம்களில் உரிய ஆவணங்களோடு விண்ணப்-பிக்கலாம் என, தேர்தல் ஆணையம் அறிவித்துள்-ளது. அதன்படி, இளம் வாக்காளர்கள் மற்றும் விடுபட்ட வாக்காளர்கள் படிவங்களை வழங்கினர். கரூர் மாவட்டம், புகழூர் நகராட்சி பகுதிகளில், ஓட்டுச்-சாவடிகளில் நடந்த வாக்காளர் பட்டியல் குறித்த, சிறப்பு முகாமை டி.ஆர்.ஓ., விமல் ராஜ் பார்வை-யிட்டு ஆய்வு செய்தார். அப்போது, புகழூர் நக-ராட்சி ஆணையாளர் முனியப்பன் உள்ளிட்ட அதி-காரிகள் உடனிருந்தனர்.இந்த முகாம், ஜன., 3, 4 ஆகிய நாட்களிலும் நடக்-கிறது. மேலும், https://voters.eci.gov.inஎன்ற இணையதளம் மற்றும் மொபைல் செயலியிலும் சமர்ப்பிக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை