உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / குளித்தலையில் மக்கள் குறைதீர் முகாம்

குளித்தலையில் மக்கள் குறைதீர் முகாம்

குளித்தலை, டிச. 15-குளித்தலை தாலுகா அலுவலகத்தில், வட்ட வழங்கல் துறை சார்பில் மாதந்தோறும் இரண்டாவது சனிக்கிழமை, உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு திட்டம், தேசிய உணவு பாதுகாப்பு சட்டம்-2013ன்படி, மக்கள் குறை தீர் முகாம் நடைபெறும்.நேற்று நடந்த முகாமிற்கு டி.எஸ்.ஓ., நீதிராஜன் தலைமை வகித்து, பொது மக்களிடமிருந்து குடும்ப அட்டை சம்மந்தமான கோரிக்கை மனுக்கள் பெற்றார். வி.ஏ.ஓ.,க்கள், ஆர்.ஐ.,யுவராஜ், அலுவலக உதவியாளர் அதியமான் மற்றும் வருவாய் துறையினர் கலந்துகொண்டு, அரசு திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கம், மொபைல்போன் எண் இணைத்தல், முகவரி மாற்றம், நகல் குடும்ப அட்டை என பல்வேறு வகையில் மனுக்கள் பெறப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை