உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கிரானைட் கல் குவாரி குறித்த மக்கள் கருத்து கேட்பு கூட்டம்

கிரானைட் கல் குவாரி குறித்த மக்கள் கருத்து கேட்பு கூட்டம்

கிருஷ்ணராயபுரம்: வீரியப்பாளையம் கிராமத்தில், கிரானைட் கல் குவாரி குறித்த மக்கள் கருத்து கேட்பு கூட்டம் லட்சுமணம்பட்டி தனியார் மண்டபத்தில் நடந்தது.குளித்தலை ஆர்.டி.ஓ., தனலட்சுமி தலைமை வகித்தார். இதில், வீரியப்பாளையம் கிராமத்தில் உள்ள கிரானைட் கல் குவாரி குறித்து, மக்களிடம் கருத்து கேட்கப்பட்டது. சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் முகிலன் பேசுகையில், ''கல் குவாரி அமைக்கப்பட்டுள்ள இடங்களில், 300 மீட்டர் அளவுக்கு அப்பால் குடியிருப்புகள் இருக்க வேண்டும். ஒலி மாசு ஏற்படுதல், காற்று மாசு ஏற்படுத்தல் ஆகியவை இருக்கக் கூடாது. குறிப்பிட்ட அளவு பூமிக்கு கீழ் எடுக்கப்படும் கனிம வளங்கள் அரசுக்கு சொந்தமானது. இதை தனியாரிடம் அனுமதிக்கக் கூடாது. தி.மு.க., அரசு தனது தேர்தல் அறிக்கையில் குவாரிகளை அரசே எடுத்து நடத்தும் என கூறப்பட்டது. இதுவரை அது செயல்படுத்தாமல் உள்ளது. இதனால் அரசுக்கு வருவாய் கிடைப்பதில்லை,'' என்றார்.கரூர் மாவட்ட மாசு கட்டுபாட்டு வாரிய பொறியாளர் ஜெயக்குமார், கிருஷ்ணராயபுரம் தாசில்தார் மகேந்திரன், பஞ்சப்பட்டி, சிந்தலவாடி வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், போலீசார், தனியார் குவாரி உரிமையாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி