புகழூர் நகராட்சி சாதாரண கூட்டம் 63 தீர்மானங்கள் நிறைவேற்றம்
கரூர் :புகழூர் நகராட்சி சாதாரண கூட்டம், தலைவர் குணசேகரன் தலைமையில், நேற்று கூட்ட அரங்கில் நடந்தது.அதில், தார்ச்சாலை வசதி செய்து தருதல், சாக்கடை கழிவுநீர் வாய்க்கால் அமைத்தல், தெரு நாய்களை கட்டுப்படுத்துதல், புகழூர் தனியார் சர்க்கரை ஆலையில் இருந்து, வெளியேறும் கரித்துாள்களை தடுத்து நிறுத்துதல் உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகளை நகராட்சி கவுன்சிலர்கள் வைத்தனர். இறுதியாக, நகராட்சியில் செலவினங்கள், புதிய திட்டங்களுக்கான நிதி ஒதுக்குதல் உள்ளிட்ட, 63 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், நகராட்சி துணைத்தலைவர் பிரதாபன், பொறியாளர் மலர்க்கொடி, கவுன்சிலர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.