முத்தனுார் வருண கணபதி கோவிலில் புரட்டாசி சதுர்த்தி
கரூர்: புரட்டாசி சதுர்த்தியையொட்டி, நேற்று நொய்யல் அருகே, முத்-தனுார் வருண கணபதி கோவிலில், சிறப்பு பூஜை நடந்தது. அதில், மூலவர் விநாயகர் சிலைக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், திருமஞ்சனம் உள்ளிட்ட, 18 வகையான வாசனை திரவி-யங்கள் மூலம் அபிஷேகம் நடந்தது. பின், பூக்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மூலவர் விநாயகர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து, மஹா தீபாராதனைக்கு பின், பக்தர்-களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.அதேபோல், சேமங்கி, நொய்யல் அத்திப்பாளையம், புன்னம், உப்புபாளையம், கரைப்பாளையம், தவிட்டுப்பாளையம், நன்-செய்புகழூர், திருக்காடுதுறை உள்ளிட்ட கிராமங்களில் உள்ள விநாயகர் கோவில்களிலும், புரட்டாசி மாத சதுர்த்தியை யொட்டி சிறப்பு பூஜை நடந்தது.