மாணவர்களுக்கு வினா-விடை புத்தகங்கள் வழங்கும் விழா
அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி, பள்ளப்பட்டி மேல்நிலைப்பள்ளி, சௌந்தராபுரம் உயர்நிலைப்பள்ளி, கோவிலுார் உயர்நிலைப்-பள்ளி உள்ளிட்ட, 20 பள்ளிகளில் கல்வி பயிலும் 10, பிளஸ் 2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வுக்கான வினா-விடை குறிப்புகள் அடங்கிய பையை எம்.எல்.ஏ., இளங்கோ வழங்கினார்.அரவக்குறிச்சி நகர பொறுப்பாளர் மணி, அரவக்குறிச்சி மேற்கு ஒன்றிய செயலாளர் மணியன், அரவக்குறிச்சி கிழக்கு ஒன்றிய செயலாளர் மணிகண்டன், நெடுகூர் கார்த்தி மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.