உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / வெறிநாய் அட்டகாசம்; 7 ஆடுகள் உயிரிழப்பு

வெறிநாய் அட்டகாசம்; 7 ஆடுகள் உயிரிழப்பு

அரவக்குறிச்சி, வெஞ்சமாங்ககூடலுார் அருகே உள்ள பரப்பத்துறையில், வெறிநாய் கடித்து, 7 ஆடுகள் இறந்தன.அரவக்குறிச்சி அருகே வெஞ்சமாங்கூடலுார் மேல்பாகம் கிராமம், பாறை தோட்டத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை வெறி நாய்கள் கடித்து, 12 ஆடுகள் இறந்தன. இந்நிலையில், வெஞ்சமாங்கூடலுார் அருகேயுள்ள பரப்பத்துறையில், ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில், வெறி நாய்கள் மீண்டும் கடித்து ஏழு ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளன. அரவக்குறிச்சி பகுதியில், வெறி நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகமாகி வருவதால், கால்நடைகள் பாதிக்கப்படுவது தொடர் கதையாகி உள்ளது.இது குறித்து, இப்பகுதி விவசாயிகள் கூறுகையில், 'வெறி நாய்கள் கடித்து ஆடுகள் உயிரிழந்தால் அதிகபட்சமாக மாவட்ட நிர்வாகம் சார்பில், 500 ரூபாய் தருகின்றனர். ஒரு கிலோ ஆட்டு இறைச்சி கிலோ, 700 ரூபாய்க்கு மேல் விற்பனையாகி வருகிறது. தெருவில் சுற்றித் திரியும் வெறி நாய்களை கட்டுப்படுத்துவதில்லை. மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து, வெறி நாய்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி