மேலும் செய்திகள்
கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம்
24-Dec-2024
கரூர், :கரூர் மாவட்ட, கால்நடை பராமரிப்பு துறை சார்பில், கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம் புகழூரில் நடந்தது.அதில், தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ், 1,550 பசுக்கள், 850 எருமை கன்றுகளுக்கு கோமாரி தடுப்பூசி போடப்பட்டது. மேலும், விவசாயிகளுக்கு தாது உப்பு கலவை பொட்டலங்கள் மற்றும் பருவ கால நோய்களை தடுக்கும் முறைகள் குறித்த கையேடும் வழங்கப்பட்டது.முகாமில், கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குனர் முரளிதரன், உதவி இயக்குனர் உமாசங்கர், நோய் புலனாய்வு பிரிவு உதவி இயக்குனர் லில்லி அருள்குமாரி, கால்நடை மருத்துவர் கண்ணன் உள்பட பலர் பங்கேற்றனர்.
24-Dec-2024