உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூர் அருகே மின் விளக்கு இல்லாத ரயில்வே பாலம்

கரூர் அருகே மின் விளக்கு இல்லாத ரயில்வே பாலம்

கரூர் :கரூர் அருகே ரயில்வே பாலத்தில், மின் விளக்குகள் அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்கின்றனர்.கரூர்-சேலம் இடையே, புதிய ரயில்வே பாதை அமைக்கும் போது, மண்மங்கலம் - வாங்கல் இடையே வாகனங்கள் செல்ல வசதியாக, மாரிக்கவுண்டன் பாளையத்தில் பாலம் அமைக்கப்பட்டது. அந்த பாலத்தின் வழியாக வேலாயுதம் பாளையம், மண்மங்கலம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள், வாங்கல், நாமக்கல் மாவட்டம் மோகனுார், திருச்சி மாவட்டம் காட்டுபுத்துார் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.ஆனால், ரயில்வே பாலம் அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆன பிறகும் கூட, அப்பகுதியில் மின் விளக்குகள் போடப்படவில்லை. இதனால், இரவு நேரத்தில் பொதுமக்கள், டூவீலர்கள் உள்ளிட்ட வாகனங்களில் செல்வதில் சிரமப்படுகின்றனர். எனவே, மாரிக்கவுண்டன் பாளையம் ரயில்வே பாலத்தில், மின் விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை