ரெயின் கோட் விற்பனை ஜோர்
கரூர்: வங்க கடலில் ஏற்பட்ட, 'பெஞ்சல்' புயலால், கரூர் மாவட்டம் முழுதும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், குளிர்ந்த காற்றுடன் மழையால் மக்கள் பல்வேறு சிரமங்களு-ககு உள்ளாகி வருகின்றனர். அதில், அவசர வேலைக்கு வெளியில் செல்பவர்கள், 'ரெயின் கோட்' அணிந்து செல்வது அவசியமாக உள்ளது.இந்நிலையில், கரூர் திண்டுக்கல் சாலை, தான்தோன்றிமலை போன்ற பல்வேறு பகுதிகளில், 'ரெய்ன் கோட்' அதிகளவு விற்-பனை செய்யப்பட்டு வருகிறது. இங்கு, கோல்கட்டா, பெங்க-ளூரு மொத்த வியாபாரிகளிடம் கொள்முதல் செய்து, சில்லரை விலையில் விற்பனை செய்கின்றனர். இதனை ஆர்வத்துடன் மக்கள் வாங்கி செல்கின்றனர். ஒரு கோட், 500 ரூபாய் முதல் தரத்துக்கு ஏற்ப விற்பனை செய்யப்படுகிறது.