உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கிருஷ்ணராயபுரம் பகுதியில் மழை

கிருஷ்ணராயபுரம் பகுதியில் மழை

கிருஷ்ணராயபுரம், கிருஷ்ணராயபுரம் பகுதியில் லேசான மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட வயலுார், சரவணபுரம், பஞ்சப்பட்டி, பாப்பகாப்பட்டி, சிவாயம், கருப்பத்துார், குழந்தைப்பட்டி, வரகூர், மேட்டுப்பட்டி ஆகிய பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு லேசான மழை பெய்தது. மழையால் மானாவாரி நிலங்களில், ஆடி மாத கடைசியில் விதைக்கப்பட்ட எள் விதைகள் முளைப்பதற்கு உதவுகிறது. தொடர்ந்து மழை பெய்தால், மீண்டும் கோடை உழவு செய்யப்பட்டு, விதை தெளிப்பு செய்யப்படாமல் உள்ள மானாவாரி நிலங்களில், விதை தெளிப்பு பணிகள் துவங்கும் என விவசாயிகள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை