மேலும் செய்திகள்
மாவட்டத்தில் தொடர்ந்து மழை
07-Oct-2025
கரூர்: கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், நேற்று மாலை இடி, மின்னலுடன் மழை பெய்தது.அரபிக்கடலில் புயல், வங்க கடலில் சுழற்சி காரணமாக தமிழ-கத்தில் வரும், 16 வரை மழை தொடரும் என, சென்னை வானிலை மையம் நேற்று முன்தினம் அறிவித்திருந்தது. இந்நி-லையில் கரூர் மாவட்டத்தில் கடந்த, ஒரு வாரமாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.நேற்று மாலை, 6:00 முதல், 6:30 மணி வரை கரூர் டவுன், செல்லாண்டிபாளையம், திருமாநிலையூர், வெங்கமேடு, தான்-தோன்றிமலை, பசுபதிபாளையம், தொழிற்பேட்டை, சுங்ககேட், திருகாம்புலியூர் உள்ளிட்ட, பல்வேறு பகுதிகளில் இடி, மின்ன-லுடன் மழை பெய்தது.* கரூர் அருகே, மாயனுார் கதவணைக்கு நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி தண்ணீர் வரத்து வினாடிக்கு, 11 ஆயிரத்து, 502 கன அடியாக குறைந்தது. அதில், டெல்டா பாசன பகுதிக்கு சம்பா சாகுபடிக்காக வினாடிக்கு, 10 ஆயிரத்து, 32 கன அடி தண்ணீர் காவிரியாற்றில் திறக்கப்பட்டது. மேலும் கீழ் கட்டளை வாய்க்கால், தென்கரை வாய்க்கால், கிருஷ்ணராயபுரம் பாசன வாய்க்காலில், 1,470 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.* க.பரமத்தி அருகே, கார்வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி தண்ணீர் வரத்து இல்லை. 26.90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 8.95 அடி-யாக இருந்ததால், நொய்யல் பாசன வாய்க்காலில், தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.* கோடை காலம் முடிந்தாலும், கடந்த மாதங்களில் அரவக்கு-றிச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் அனல் காற்றுடன் வெயில் அதிகபட்சமாக வாட்டி வதைத்ததால், மக்களின் இயல்பு வாழ்கை பாதித்தது. இந்நிலையில் கடந்த 3 நாட்களாக மித மழை பெய்த நிலையில், நேற்று மாலை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கன-மழை பெய்தது. இதனால் வீடுகளில் உள்ள ஆழ்குழாய் கிண-றுகள், விவசாய கிணறுகள் உள்ளிட்ட நீர் நிலைகளில் நீர்மட்டம் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.மாலை 4:00 முதல் 5:00 மணி வரை கன மழை பெய்தது. மழையால் சாலையில் மழை நீர் ஆறு போல் ஓடியது. தாழ்வான பகுதிகள் மற்றும் வயல்களில் தண்ணீர் தேங்கியது. மழையால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மழை காரண-மாக இப்பகுதி முழுவதும் குளிர்ச்சியான வானிலை நிலவியது. அரவக்குறிச்சி ஒன்றியத்தின், 18 ஊராட்சி பகுதிகளிலும் பரவ-லாக மழை கொட்டியது.
07-Oct-2025