உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / அமராவதி ஆற்றுப்பகுதிகளில் பெய்த மழை பெ.ஆ., கோவில் தடுப்பணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு

அமராவதி ஆற்றுப்பகுதிகளில் பெய்த மழை பெ.ஆ., கோவில் தடுப்பணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு

அமராவதி ஆற்றுப்பகுதிகளில் பெய்த மழைபெ.ஆ., கோவில் தடுப்பணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்புகரூர், நவ. 5-அமராவதி ஆற்றுப்பகுதிகளில் பெய்த மழை காரணமாக, கரூர் அருகே பெரிய ஆண்டாங் கோவில் தடுப்பணைக்கு, தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.திருப்பூர் மாவட்டம், உடுமலை பேட்டை அமராவதி அணைக்கு நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 742 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அமராவதி ஆற்றில் வினாடிக்கு, 200 கன அடி தண்ணீரும், புதிய பாசன வாய்க்காலில், 400 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டது. 90 அடி உயரம் கொண்ட அணை நீர்மட்டம், 87.08 அடியாக இருந்தது.கரூர் மாவட்டத்தில், அமராவதி ஆற்றுப் பகுதிகளான, அரவக்குறிச்சி, சின்னதாராபுரம், ராஜபுரம், க.பரமத்தி, செட்டிப்பாளை யம் உள்ளிட்ட பகுதிகளில், தொடர் மழை பெய்து வருகிறது.இதனால், கரூர் அருகே பெரிய ஆண்டாங் கோவில் தடுப்பணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் தடுப்பணைக்கு வினாடிக்கு, 47 கன அடி தண்ணீர் வந்தது. நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி வினாடிக்கு 865 கன அடியாக தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.மாயனுார் கதவணைகரூர் அருகே, மாயனுார் கதவணைக்கு நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 14 ஆயிரத்து, 717 கன அடியாக, தண்ணீர் வரத்து குறைந்தது. டெல்டா பாசன பகுதிக்கு சாகுபடி பணிக்காக, காவிரியாற்றில், 13 ஆயிரத்து, 497 கன அடி தண்ணீரும், நான்கு பாசன வாய்க்காலில், 1,220 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டுள்ளது. ஆத்துப்பாளையம் அணைகரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே, கார் வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு, நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி அணைக்கு, 44 கன அடி தண்ணீர் வந்தது. 26.90 அடி உயரம் கொண்ட அணை நீர்மட்டம், 24.60 அடியாக இருந்தது. அணையில் இருந்து, நொய்யல் ஆற்றில் தண்ணீர் திறப்பு, தற்காலிமாக நிறுத்தப்பட்டுள்ளது. மழை நிலவரம்கரூர் மாவட்டத்தில், நேற்று காலை, 8:00 மணி வரை, கடந்த, 24 மணி நேரத்தில் பெய்த மழையளவு விபரம் (மி.மீ.,) கரூர் மற்றும் க.பரமத்தியில் தலா, 1 மி.மீ., மழை பெய்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை