எள் செடிகளுக்கு கிடைத்துள்ள மழை நீர்
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் பகுதிகளில், மிதமான மழை பெய்ததால் மானாவாரி எள் செடிகளுக்கு மழை நீர் கிடைத்துள்ளது.கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட வயலுார், சரவண-புரம், வரகூர், குழந்தைப்பட்டி, பாப்பகாப்பட்டி, வீரியபா-ளையம், பஞ்சப்பட்டி, மணவாசி ஆகிய இடங்களில் நேற்று முன்தினம் இரவு நேரத்தில் மிதமான மழை பெய்தது.இந்த மழையால், மானாவாரி நிலங்களில் சாகுபடி செய்யப்பட்-டுள்ள எள், சோளம், துவரை செடிகளுக்கு மழை நீர் கிடைத்துள்-ளது. மேலும் தொடர்ந்து மழை பெய்தால், பயிர்கள் வளர்ச்சிக்கு பயன் கிடைக்கும் என விவசாயிகள் கூறினர். மேலும் கடந்த, 25 நாட்களுக்கு பிறகு மழை பெய்ததால் விவசாயிகள் சற்று ஆறுதல் அடைந்தனர்.