உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மழைநீர் சேமிப்பு குளம் பராமரிப்பு

மழைநீர் சேமிப்பு குளம் பராமரிப்பு

கிருஷ்ணராயபுரம், கிருஷ்ணராயபுரம் அடுத்த கருப்பத்துார் பஞ்., மேட்டுப்பட்டி கிராமத்தில் மழைநீர் சேமிப்பு குளம் உள்ளது. மழைக்காலத்தில், இந்த குளத்தில் மழைநீர் சேமிக்கப்படுகிறது. இதனால், அருகே உள்ள விவசாய கிணறுகள் மற்றும் பஞ்., போர்வெல் கிணறுகளுக்கு தண்ணீர் கிடைக்கிறது. தற்போது, மழைநீர் சேமிப்பு குளத்தை சுற்றி முள்செடிகள் வளர்ந்து புதர்மண்டி காணப்படுகிறது. இதனால், மழைக்காலங்களில் தண்ணீரை சேமிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில் பஞ்., நிர்வாகம் சார்பில், மழைநீர் சேமிப்பு குளத்தை சுற்றி வளர்ந்த முள்செடிகளை அகற்றும் பணி நடந்தது. இதில், நுாறு நாள் திட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !