உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / ரயில்வே குகை வழி பாதைகளில் மழை நீர்;வாகன ஓட்டிகள் தவிப்பு

ரயில்வே குகை வழி பாதைகளில் மழை நீர்;வாகன ஓட்டிகள் தவிப்பு

கரூர், கரூர் மாநகராட்சியில், ரயில்வே குகைவழி பாதையில் மழைநீர் தேங்கியுள்ளதால், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.கரூர் மாநகராட்சிக்குட்பட்ட- பசுபதிபாளையம், பெரிய குளத்துப்பாளையம், சணப்பிரட்டி ஆகிய இடங்களில் ரயில்வே குகை வழிப்பாதை உள்ளது. இங்கு, போதிய மழைநீர் வடிகால் வசதியில்லாததால், மழை பெய்யும் போது தண்ணீர் தேங்கி நிற்கிறது. கடந்த, இரண்டு நாட்களாக கரூரில் மழை பெய்து வருகிறது. ரயில்வே குகை வழிப்பாதையில் மழைநீர் மட்டுமின்றி ஊற்றெடுத்த தண்ணீரும் தேங்கியுள்ளது. இதனால், ரயில்வே குகை வழிப்பா-தையில் நடந்து கூட செல்ல முடியாமல், பொதுமக்கள் அவதிப்ப-டுகின்றனர்.மேலும் வாகன ஓட்டிகளும், குகை வழிப்பாதை வழியாக செல்ல முடியாமல், மாற்று பாதையில் செல்கின்றனர். எனவே, குகை வழிப்பா-தைகளில் தேங்கியுள்ள மழை நீர் மற்றும் ஊற்று நீரை, உடனுக்குடன் வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது-மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை