உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / அரசு பள்ளியில் மழைநீர் தேக்கம் தொற்று நோய் பரவும் அபாயம்

அரசு பள்ளியில் மழைநீர் தேக்கம் தொற்று நோய் பரவும் அபாயம்

அரசு பள்ளியில் மழைநீர் தேக்கம்தொற்று நோய் பரவும் அபாயம்கரூர், அக். 17-கரூர் தான்தோன்றிமலை அரசு மேல்நிலை பள்ளியில், 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். இந்த வளாகத்தில், சமக்ர சிஷ்யான் அலுவலகம், காலை உணவு திட்ட சமையல் கூடம் உள்ளது. பள்ளி வளாகத்தில் பின்புறம் தண்ணீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. கரூரில், 2.4 மி.மீட்டர் மழை நேற்று பதிவாகியது. இங்கு சிறிதளவு மழை பெய்தாலே பள்ளி வளாகத்தில் தண்ணீர் தேங்கி நிற்பது வாடிக்கையாக உள்ளது. அந்த வழியாக தான் மாணவர்கள் கழிப்பறைக்கு செல்ல வேண்டி உள்ளது. மழை நீர் ஒரே இடத்தில் குளம்போல் சூழ்ந்துள்ளதால் கொசு உற்பத்தியாகி நோய் தொற்று ஏற்படவும் வாய்ப்புள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் வரும் நாட்களில் மழை தீவிரமடைய கூடும். அப்போது, அதிகளவில் மழை பெய்யும் போது, வளாகம் முழுவதும் தண்ணீர் தேங்க வாய்ப்பு அதிகம். எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மாணவர்கள் நலனில் அக்கறை செலுத்தி மழை நீரை அப்புறப்படுத்தி, இனிவரும் காலங்களில் மழை நீர் தேங்காமல் இருக்கும் வகையில் சரி செய்ய வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை