அரவக்குறிச்சியில் மழை முருங்கை மரங்கள் செழிப்பு
அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் முருங்கை விவ-சாயம் பிரதான தொழிலாக விவசாயிகள் செய்து வருகின்றனர். கடந்த மாதம் அரவக்குறிச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் முருங்கை மரங்களின் இலைகள் உதிர்ந்து காணப்பட்டதால், விவ-சாயிகள் மிகவும் வேதனை அடைந்தனர்.இந்நிலையில், கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் முருங்கை மரங்கள் துளிர்விட்டு வளர துவங்கியுள்ளன. இதனால் முருங்கை பயிரிட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தற்போது துளிர்விட துவங்கியுள்ள முருங்கை மரங்களில், டிச., ஜன., மாத துவக்கத்தில் முருங்கைக்காய்கள் காய்க்க தொடங்கும். தற்போது, வரப்போகும் சீசன் தங்களுக்கு நல்ல பலன் அளிக்கும் என, முருங்கை விவசாயிகள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.