முப்பெரும் விழா பேனர்கள் அகற்றம்
கிருஷ்ணராயபுரம், கரூர் மாவட்ட தி.மு.க., சார்பில் முப்பெரும் விழா, கோடங்கிப்பட்டி பகுதியில் நேற்று நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ., சிவகாமசுந்தரி மற்றும் நிர்வாகிகள் சார்பில் முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஆகியோரை வரவேற்று வழங்கும் வகையில் கிருஷ்ணராயபுரம், லாலாப்பேட்டை, மகாதானபுரம், பொய்கைப்புத்துார், மாயனுார், மணவாசி, புலியூர் ஆகிய பகுதிகளில் சாலையோர இடங்களை ஆக்கிரமித்து டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டன.இந்நிலையில் நேற்று காலை தி.மு.க., மேலிடம் தெரிவித்த வாய்மொழி உத்தரவு காரணமாக சாலையோர இடங்களில் வைக்கப்பட்ட பேனர்கள் முழுவதும் உடனடியாக அகற்றப்பட்டன. பின்னர் கட்சி கொடிகள், வாழை மரங்களால் தோரணங்கள் மட்டும் கட்டப்பட்டன.