அரவக்குறிச்சியில் விளையாட்டு மைதானம் அமைக்க கோரிக்கை
அரவக்குறிச்சியில் விளையாட்டு மைதானம் அமைக்க கோரிக்கைஅரவக்குறிச்சி, அக். 4-அரவக்குறிச்சியில், நடைபயிற்சி மேற்கொள்வோர், விளையாட்டு வீரர்களுக்காக பொது விளையாட்டு மைதானம் தேவை.அரவக்குறிச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், 2,000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இதில் வாலிபர்கள், நடுத்தர வயதினர் பெரும்பாலும் விளையாட்டு பிரியர்களாகவே உள்ளனர். ஆனால், விளையாட்டு வீரர்களுக்கு என்று அரவக்குறிச்சியில் தனியாக விளையாட்டு மைதானம் இல்லை. அரவக்குறிச்சி, அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள விளையாட்டு மைதானம் மாணவர்கள் மட்டுமே பயன்படுத்த அனுமதி அளிக்கப்படுகிறது. பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.விளையாட்டு மைதானம் இல்லாததால், தனியார் தோட்டங்கள் மற்றும் காடுகளுக்கு சென்று இளைஞர்கள் விளையாடி வருகின்றனர். இதே போல வயதான முதியவர்கள், சர்க்கரை நோய் உள்ளவர்கள் காலை நடை பயிற்சி மேற்கொள்ள விளையாட்டு மைதானம் இல்லாததால், பொது சாலையை பயன்படுத்தி வருகின்றனர். பொது சாலையை பயன்படுத்தும் போது, சில சமயங்களில் விபத்து நடந்து விடுகிறது.எனவே, புதிய விளையாட்டு மைதானமோ அல்லது அரவக்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தை, பொது பயன்பாட்டிற்கு அளிக்க வேண்டும் என, அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.