அரவக்குறிச்சி பேக்கரிகளில் ஆய்வு செய்ய கோரிக்கை
அரவக்குறிச்சி:தீபாவளி பண்டிகை, வரும் நவ., 8ல் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, பொதுமக்கள், தீபாவளி பொருட்கள் வாங்க அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி, சின்னதாராபுரம், ஈசநத்தம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைவீதிகளுக்கு படையெடுத்து வருகின்றனர். மேலும், நண்பர்கள், விருந்தினர்களுக்கு ஸ்வீட் வழங்க, ஆர்டர் கொடுத்து வருகின்றனர். கடந்தாண்டை காட்டிலும், இந்தாண்டு ஸ்வீட், கார வகைகளின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.இதற்கிடையே, தீபாவளி பண்டிகையையொட்டி அதிகளவு இனிப்பு, காரம் விற்பனையாகும் என்பதால், தரமற்ற இனிப்புகள், கார வகைகள் விற்பனை செய்ய வாய்ப்புள்ளது. எனவே, அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி, சின்னதாராபுரம், ஈசநத்தம் உள்ளிட்ட அரவக்குறிச்சி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பேக்கரி மற்றும் கடைகளில் தரமான முறையில் இனிப்பு மற்றும் காரம் தயாரித்து விற்கப்படுகிறதா? என, இனிப்பு மற்றும் காரம் தயாரிக்கும் குடோன்களில் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என, சமூக நல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.