உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பெரிய குளத்தின் வரத்து வாய்க்கால் துார் வாரும் பணியை முடிக்க கோரிக்கை

பெரிய குளத்தின் வரத்து வாய்க்கால் துார் வாரும் பணியை முடிக்க கோரிக்கை

கரூர்: பெரிய குளத்தின் வரத்து வாய்க்காலை துார் வார வேண்டும்கரூர் மாவட்டத்தில், வெள்ளியணை ஏரி, 35,000 சதுர மீட்டர் பரப்பளவு கொண்டது. இதில், 0.5 டி.எம்.சி., தண்ணீர் தேக்கி வைக்க முடியும். ஏரி நிரம்பினால், 50 கி.மீ. சுற்றளவுக்கு நிலத்தடி நீர்மட்டம் உயரும்.செல்லாண்டிபட்டி, குமாரபாளையம் என, 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில், வெள்ளியணை வடக்கு ஆயக்கட்டு பகுதியில், 60 ஹெக்டேரும், தெற்கு ஆயக்கட்டு பகுதியில், 73 ஹெக்டேரும் என மொத்தம், 133 ஹெக்டேர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்-றன.இந்த ஏரியின் முக்கிய நீராதாரமாக திண்டுக்கல் மாவட்டம், வேடசந்துார் அருகில் குடகனாற்றின் குறுக்கே கட்டப்பட்டி-ருக்கும் அழகாபுரி அணை உள்ளது. இங்கிருந்து திறக்கப்படும் தண்ணீர் வேடசந்துார், கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியைஅடுத்த பெரியமஞ்சுவெளி பகுதி வழியாக, 57 கி.மீ., தொலைவு பய-ணித்து வெள்ளியணை ஏரியை வந்தடைகிறது.கடந்த, 2005-ம் ஆண்டுக்கு பிறகு அழகாபுரி அணையின் நீர்ப்பி-டிப்பு பகுதியில் போதிய மழைப்பொழிவு இல்லாததால், வெள்-ளியணை ஏரிக்கு வரும் நீரின் வரத்தும் முழுமையாக நின்று போனது. இதையடுத்து, வாய்க்கால்களில் தண்ணீர் வரத்து இல்-லாமல் போனதால், நாளடைவில் வாய்க்கால்களும் ஆக்கிரமிப்-புக்குள்ளாகி புதர்மண்டி காட்சியளிக்கின்றன.சில ஆண்டுகளுக்கு முன், வெள்ளியணை வரத்து வாய்க்காலை துார்வாரும் பணிகள் தொடங்கப்பட்டன.நாளடைவில் கண்டு கொள்ளாததால், கோடை காலம் முடியும் முன், துார் வாரும் பணிகளை முடிகளை வேண்டும் என, வெள்-ளியணை ஏரி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை