குளித்தலையில் தரமற்ற சாலை புதிதாக அமைக்க கோரிக்கை
குளித்தலை, குளித்தலை நகராட்சியில் உள்ள, 24 வார்டுகளிலும் மத்திய அரசின் திட்டத்திலிருந்து, அனைத்து குடியிருப்புகளுக்கும் இலவச குடிநீர் வழங்கும் திட்டத்தின் கீழ், சிமென்ட் சாலை மற்றும் தார்ச்சாலைகளை பெயர்த்தெடுத்து, புதிய குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட்டது. இத்திட்டத்தில், அனைத்து பகுதிகளுக்கும் புதிதாக சிமென்ட் சாலை அமைக்கும் பணி நடந்தது. இதில் நகராட்சி, 1வது வார்டு தெற்கு மணத்தட்டை கிராமத்தில் போடப்பட்ட சிமென்ட் சாலையில், ஜல்லி கற்கள் பெயர்ந்து தரமற்ற முறையில் போடப்பட்டுள்ளது. எனவே இந்த சாலையை அகற்றி விட்டு, புதிதாக தரமான சிமென்ட் சாலை அமைக்க வேண்டும் என கிராம மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.