காய்ச்சல் முகாம்களை நடத்த வேண்டுகோள்
அரவக்குறிச்சி, தொடர் மழையால், காய்ச்சல் உள்ளிட்ட நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதால், தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். கடந்த வாரம், மாவட்டத்திலேயே அரவக்குறிச்சியில் அதிக மழை பெய்தது. இதனால் அரவக்குறிச்சி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் டெங்கு, மலேரியா போன்ற காய்ச்சல் பரவி வருவதாகவும், இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர். எனவே, காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கவும், ரசாயன புகை மூலம் கொசுப்புழு ஒழிப்பு பணிகள் மேற்கொள்ளவும், காய்ச்சல் முகாம்களை உடனடியாக நடத்த வேண்டும்.அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த அனைத்து ஊராட்சிகளிலும் காய்ச்சல் தடுப்பு முகாம்களை நடத்தி, பொதுமக்களை நோயில் இருந்து பாதுகாக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.