உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மாநகராட்சி பள்ளி அருகே வேகத்தடை வெள்ளை கோடுகள் போட கோரிக்கை

மாநகராட்சி பள்ளி அருகே வேகத்தடை வெள்ளை கோடுகள் போட கோரிக்கை

கரூர், கரூர் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி அருகே உள்ள வேகத்தடைகளுக்கு வெள்ளை கோடு போட வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர்.கரூர் லைட்ஹவுஸ் கார்னர் பகுதியில், மாநகராட்சி குமரன் உயர்நிலைப்பள்ளி செயல்படுகிறது. அதில், 200 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். கரூர் நகரப்பகுதிகளில் இருந்து, ஏராளமான வாகனங்கள் குமரன் உயர்நிலைபள்ளி வழியாக, திருச்சி சாலை சுங்ககேட் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு செல்கிறது.பள்ளிக்கு அருகில், விபத்துக்களை தவிர்க்க சாலையில், சமீபத்தில் வேகத்தடை அமைக்கப்பட்டது. ஆனால், அதில் வெள்ளை கோடுகள் போடவில்லை. வேகத்தடை இருப்பது தெரியாமல், வரும் வாகன ஓட்டிகள், விபத்தில் சிக்குகின்றனர்.குறிப்பாக, இரவு நேரத்தில் செல்கிறவர்கள் வேகத்தடை இருப்பதை தெரிந்து கொள்ள முடியாமல், தவறி விழுந்து காயமடைகின்றனர். எனவே, குமரன் உயர் நிலைப்பள்ளி அருகே உள்ள, வேகத்தடையில், வெள்ளை கோடு போட, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினரும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை