உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பள்ளி முன்புள்ள கழிவுநீர் சாக்கடை கான்கிரீட் அமைத்து தர கோரிக்கை

பள்ளி முன்புள்ள கழிவுநீர் சாக்கடை கான்கிரீட் அமைத்து தர கோரிக்கை

அரவக்குறிச்சி, அரவக்குறிச்சியில் உள்ள, அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளியில், 500க்கும் மேற்பட்ட மாணவியர் படித்து வருகின்றனர். பள்ளி வெளிப்புறத்தில், 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கழிவுநீர் சாக்கடை, தற்போது வரை கான்கிரீட் தளம் போடாமல் உள்ளது. மேலும் அரவக்குறிச்சியில் இருந்து கரூர் செல்லும் சாலையும் குறுகலாக உள்ளதால், மழை காலங்களில் பள்ளி முடிந்து வெளியே வரும் போது கழிவுநீர் சாக்கடைக்குள் விழும் சம்பவங்களும் நடந்துள்ளன.எனவே, மாணவியரின் பாதுகாப்பை கருதி, கான்கிரீட் தளம் போட பள்ளி நிர்வாகத்திடம் பெற்றோர்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால், தற்போது வரை கான்கிரீட் தளம் போடாமல் கழிவு நீர் சாக்கடை திறந்த வெளியிலேயே உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை