உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / புன்னம்சத்திரம் சாலையில் மழைநீர் வடிகாலை சீரமைக்க கோரிக்கை

புன்னம்சத்திரம் சாலையில் மழைநீர் வடிகாலை சீரமைக்க கோரிக்கை

கரூர், கரூர் - ஈரோடு சாலையில் உள்ள புன்னம்சத்திரத்தில், பஞ்., அலுவலகம், வி.ஏ.ஓ., அலுவலகம், மின்வாரிய அலுவலகம், வங்கிகள் உள்ளன. கரூர், கொடுமுடி, ஈரோடு போன்ற ஊர்களுக்கு செல்வதற்கும், அங்குள்ள கடைவீதிக்கு வந்து தான் பஸ் ஏறி செல்ல வேண்டும். தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பல்வேறு பணி நிமித்தமாக, புன்னம் சத்திரம் கடைவீதிக்கு வந்து செல்கின்றனர். இந்த நெடுஞ்சாலை இருபுறங்களில் மழைநீர் வடிகால், பல இடங்களில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.இதனால் போதிய வடிகால் வசதி இல்லாததால் மழை நீர் செல்வதில் தடை ஏற்பட்டு, வழியிலேயே தேங்கி நிற்கிறது. அப்பகுதியில் பொதுமக்கள் நடந்து செல்ல கூட மிகவும் சிரமப்படுகின்றனர். தேங்கிய நீரால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இந்த சாலையில் மழைநீர் வடிகால் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ