மேலும் செய்திகள்
புறக்காவல் நிலையம் திறப்பு
17-Oct-2025
குளித்தலை, பஞ்சபட்டியில் புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடப்பட்டுள்ளது.குளித்தலை அடுத்த தோகைமலை, சிந்தாமணி பட்டி, லாலாபேட்டை ஆகிய போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதிகளின் மத்தியில் அமைந்துள்ளது பஞ்சபட்டி கிராமம். பஞ்சப்பட்டி சுற்று வட்டார பகுதிகளில், அடிக்கடி குற்ற சம்பவங்கள் நடந்து வருகின்றன. பாதிக்கப்பட்ட பொதுமக்கள் தோகைமலை, லாலாபேட்டை, சிந்தாமணிப்பட்டி போலீசில் புகார் கொடுக்க வேண்டிய நிலை இருந்து வருகிறது.பொது மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையிலும், குற்றவாளிகளை உடனே பிடித்து காவல் துறை நடவடிக்கை எடுக்கும் வகையிலும் தோகைமலை, லாலாபேட்டை, சிந்தாமணிப்பட்டி போலீஸ் எல்லைக்குட்பட்ட கிராமங்களை பிரித்து, பஞ்சபட்டியில் புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
17-Oct-2025