உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / அரசு உயர்நிலைப் பள்ளியை தரம் உயர்த்த வேண்டுகோள்

அரசு உயர்நிலைப் பள்ளியை தரம் உயர்த்த வேண்டுகோள்

அரவக்குறிச்சி, அரவக்குறிச்சி, அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளியை, மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.அரவக்குறிச்சியில், ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளி கரூர் சாலையில் செயல்பட்டு வருகிறது. இங்கு, 500க்கும் மேற்பட்ட மாணவியர் படித்து வருகின்றனர். பிளஸ் 1 வகுப்பிற்கு, அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவியர் சிலர் சேருகின்றனர்.இது இருபாலர் பள்ளியாக உள்ளதால், அருகில் உள்ள பள்ளப்பட்டி பெண்கள் பள்ளியில் சேர்த்து விடுகின்றனர். சில பெற்றோர், தங்கள் குழந்தைகளை பத்தாம் வகுப்புடன் நிறுத்தி விடுகின்றனர். இதனால் மாணவியர் பிளஸ் 2 செல்ல இயலாமல் இடைநிற்றல் அதிகமாகி பெண்களின் கல்வி முன்னேற்றம் தடைபடுகிறது.எனவே, அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியை, மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்துவதன் மூலமாக, அனைத்து பெண் குழந்தைகளும் பிளஸ் 2 முடித்து தங்களுடைய உயர் கல்வியை தொடர்வதற்கு எளிமையாகவும், வசதியாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் என பெற்றோர் கூறுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !