நகை திருடிய தம்பதிக்கு காப்பு
கரூர்: நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் பகுதியை சேர்ந்தவர் அருள்பாண்டி, 35; இவரது மாமனார் வீடு, கரூர் அருகே செல்லாண்டிப்பாளையத்தில் உள்ளது. கடந்த, 5ல் அருள்பாண்டி குடும்பத்தினர், ஈரோடு மாவட்டம், கொடுமுடியில் நடந்த உறவினர் வீட்டு திருமணத்துக்கு சென்றுள்ளனர். பின், வீட்டுக்கு சென்றபோது, பீரோவில் வைக்கப்பட்டிருந்த, இரண்டே முக்கால் பவுன் தங்க நகைகளை காணவில்லை. மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து, அருள்பாண்டி கொடுத்த புகார்படி, தங்க நகைகளை திருடியதாக, செல்லாண்டிப்பாளையம் பகுதியை சேர்ந்த பார்த்தசாரதி, 31, அவரது மனைவி ஜனனி, 30, ஆகியோரை, தான்தோன்றிமலை போலீசார் கைது செய்தனர்.