உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / குடியிருப்போர் நலச்சங்கம் மரக்கன்று வழங்கி விழிப்புணர்வு

குடியிருப்போர் நலச்சங்கம் மரக்கன்று வழங்கி விழிப்புணர்வு

குளித்தலை:குளித்தலை அடுத்த, கழுகூர் பஞ்., குடியிருப்போர் நலச்சங்கம் சார்பாக பொதுமக்களுக்கும், மாணவ, மாணவியருக்கும் மரக்கன்று வழங்கி, விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.பொது இடங்களில் மரக்கன்றுகளை நட்டு, கழுகூர் குடியிருப்போர் நலச்சங்கம் சார்பாக பராமரிப்பது, வீட்டுக்கு ஒரு மரக்கன்று நட்டு குடியிருப்பவர்களால் பராமரிக்க செய்வது, அனைத்து குழந்தைகளும் கல்வி பயின்று வீட்டுக்கு ஒரு விஞ்ஞானியாக உருவாக்குவது, அனைத்து மாணவர்களுக்கும் குடியிருப்போர் சங்கத்தின் சார்பாக கல்வி வழி காட்டுதல்களை ஏற்படுத்துவது, கழுகூரில் உள்ள தெருக்களை சுத்தமாக வைத்துக் கொள்வது என்பன போன்ற பல்வேறு சமூக பணிகளை செய்து வருகின்றனர்.இதேபோல் குழந்தைகள் மத்தியில், இயற்கை வளம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு, விதைபந்து துாவுவது, பனை விதைகளை நடவு செய்வது போன்றவை வாயிலாக பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். மேலும் மாணவர்களின் அறிவுத்திறை வளர்க்க, நுாற்றுக்கணக்கான பொது அறிவு புத்தகங்கள், பல்வேறு ஆசிரியர்கள் எழுதிய புத்தகங்கள், வேலைவாய்ப்பு தேர்வுக்கான வழிகாட்டுதல் மற்றும் தேர்வுக்கான புத்தகங்களை வைத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ