உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / நெல் சாகுபடி வயல்களில் நெற்கதிர்கள் விளைச்சல்

நெல் சாகுபடி வயல்களில் நெற்கதிர்கள் விளைச்சல்

கிருஷ்ணராயபுரம், ஜன. 4-பிள்ளபாளையம் பகுதியில், நெல் சாகுபடி செய்யப்பட்ட வயல்களில், நெற் கதிர்கள் விளைச்சல் கண்டு வருகிறது.கிருஷ்ணராயபுரம் அடுத்த பிள்ளபாளையம், வல்லம், கருப்பத்துார் ஆகிய பகுதிகளில் விவசாயிகள் நெல் சாகுபடி செய்துள்ளனர். வாய்க்கால் பாசன தண்ணீர் கொண்டு நீர் பாய்ச்சப்பட்டது. தற்போது வயல்களில், நெற் பயிர்கள் பசுமையாக வளர்ந்து, நெற்கதிர்கள் விளைச்சல் கண்டு வருகிறது.சில வாரங்களில் விளைந்த நெற்கதிர்கள் அறுவடை செய்யப்படுகிறது. இந்தாண்டு சீரான மழை பொழிவு காரணமாக, நெல் விளைச்சல் பாதிப்பு இன்றி, அறுவடை செய்யும் வகையில் தயார் நிலையில் உள்ளது.மேலும் கூடுதல் மகசூல் கிடைக்கும் வகையில், பயிர்கள் செழிப்பாக இருக்கிறது என, விவசாயிகள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை