சாலை அமைக்கும் பணி தொடக்கம்
சாலை அமைக்கும் பணி தொடக்கம்கிருஷ்ணராயபுரம், நவ. 29-கிருஷ்ணராயபுரம் நெடுஞ்சாலை துறை சார்பில், கீரனுார் புதுவாடி சாலை பழுது பார்த்து புதுப்பிக்கும் பணி நடந்தது.கிருஷ்ணராயபுரம் அடுத்த கீரனுார் பஞ்சாயத்து, கரையாம்பட்டி பகுதியில் இருந்து கீரனுார் புதுவாடி செல்லும் சாலை மிகவும் மோசமாக இருந்தது. இந்நிலையில், சாலையை பழுது பார்த்து புதுப்பிக்கும் வகையில், நெடுஞ்சாலைத் துறை சார்பில் சாலை சிறப்பு பழுது பார்த்தல் பணிகள் நேற்று துவங்கப்பட்டது. மேலும், தார் சாலை தளத்தின் உயரத்தை உட்கோட்ட பொறியாளர் கர்ணன், கிருஷ்ணராயபுரம் உட்கோட்ட உதவி பொறியாளர் அசரூதீன் ஆகியோர் கொண்ட குழுவினர் கள ஆய்வு பணிகளில் ஈடுபட்டனர்.