உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மைல் கல்லுக்கு சாலை பணியாளர்கள் பூஜை

மைல் கல்லுக்கு சாலை பணியாளர்கள் பூஜை

மைல் கல்லுக்கு சாலை பணியாளர்கள் பூஜைகுளித்தலை,குளித்தலை, நெடுஞ்சாலைதுறை உதவி கோட்ட பொறியாளர் அலுவலக கட்டுப்பாட்டில் உள்ள சாலை பணியாளர்கள், கரூர் - திருச்சி நெடுஞ்சாலையில் உள்ள தண்ணீர்பள்ளியில், ஆயுதபூஜையை முன்னிட்டு, மைல் கல்லுக்கு மாலை அணிவித்து, வாழை இலையில் பொரி, கடலை, சுண்டல், வாழைப்பழம் மற்றும் பழங்கள் வைத்து, தேங்காய் உடைத்து அபிஷேகம் செய்து வழிபாடு செய்தனர்.இந்நிகழ்ச்சி ஏ.டி. செந்தில்குமரன் தலைமையில், உதவி பொறியாளர் ஜெயபாலன், சாலை ஆய்வாளர்கள் சேகர், பாலு ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. சாலை பணியாளர்கள் தங்களது பைக்குகளுக்கு பொட்டு வைத்து, மாலையிட்டு அபிஷேகம் செய்தனர். அலுவலக பணியாளர்கள், சாலை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை