உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / சாலையோர மணல் குவியல் வாகன ஓட்டிகள் தவிப்பு

சாலையோர மணல் குவியல் வாகன ஓட்டிகள் தவிப்பு

கரூர், கரூர் மாவட்டத்தில் காவிரி, அமராவதி ஆற்றில் மணல் குவாரிகள் செயல்படவில்லை. இருந்த போதும், மாட்டு வண்டிகள் மூலம் மணல் திருட்டு நடந்து வருகிறது. லாரிகள் வாயிலாக பிற மாவட்டங்களில் தொடர்ந்து மணல் கடத்தப்பட்டு வருகிறது. இந்த லாரிகள், கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழியாக, சுக்காலியூர் ரவுண்டானா வந்து, மதுரை - சேலம், கரூர் - கோவை சாலைகள் வழியாக செல்கின்றன. மணல் சுமந்து செல்லும் லாரிகள், மூடாமல் செல்வதால் காற்று அடிக்கும் போது, மணல் துகள்கள் பறப்பதால் சாலையில் தடுப்பு சுவர் ஓரங்களில் குவிந்து கிடக்கிறது.அதனால், இரண்டு சக்கர வாகனங்களில் செல்வோர், நிலை தடுமாறி விபத்தில்ல் சிக்கிக் கொள்கின்றனர். சில நேரங்களில் உயிரிழப்புகள் கூட தவிர்க்க முடியாத ஒன்றாகி விடுகிறது. அவ்வப்போது நெடுஞ்சாலை துறை பணியாளர்கள் சுத்தம் செய்தாலும், தொடர்ந்து மணல் சேர்ந்து கொள்கிறது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், மணல் கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை