உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / சாலையில் மரக்கன்றுகள் பாதுகாப்பு பணி மும்முரம்

சாலையில் மரக்கன்றுகள் பாதுகாப்பு பணி மும்முரம்

கிருஷ்ணராயபுரம்: பிள்ளபாளையம் பஞ்சாயத்து சாலையில், நடப்பட்ட மரக்கன்றுக-ளுக்கு நீர் ஊற்றி, பாதுகாப்பு தடுப்பு வேலி அமைக்கும் பணி துரிதமாக நடந்தது.கிருஷ்ணராயபுரம் அடுத்த பிள்ளபாளையம் பஞ்சாயத்து வல்லம், கொம்பாடிப்பட்டி, பாலப்பட்டி பிரிவு வரை தார்ச்சாலையின் இருபுறமும் மரக்கன்றுகள் நடும் பணி கடந்த மாதம் நடந்தது. இதில் பல வகையான மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. இதனை பாதுகாப்பு செய்யும் வகையில், தடுப்பு வேலிகள் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. மேலும் மரக்கன்றுகள் விரைவாக வளர்ந்து வருவதாற்காக, 100 நாள் திட்ட தொழிலாளர்கள் கொண்டு தண்ணீர் ஊற்றும் பணி நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ