உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கூரை வீடு தீ பிடித்து எரிந்து பொருட்கள் நாசம்

கூரை வீடு தீ பிடித்து எரிந்து பொருட்கள் நாசம்

கிருஷ்ணராயபுரம், கள்ளப்பள்ளி தெற்கு கிராமத்தில், மின் கசிவு காரணமாக கூரை வீடு தீப்பிடித்து எரிந்து, பொருட்கள் எரிந்து நாசமானது.கிருஷ்ணராயபுரம் அடுத்த கள்ளப்பள்ளி தெற்கு கிராமத்தை சேர்ந்தவர் நாகஜோதி, 55. இவர், கூரை வீட்டில் தனது மகனுடன் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை, வீட்டில் எவரும் இல்லாத போது மின் கசிவு ஏற்பட்டு, வீட்டின் மேற்கூரை கீற்றுகள் எரிந்து நாசமானது. அப்போது அருகில் உள்ளவர்கள், தண்ணீர் கொண்டு தீயை அணைத்தனர். இதனால் தீ விபத்து தவிர்க்கப்பட்டது. வீட்டில் இருந்து துணிகள், சில பொருட்கள் தீயில் எரிந்துள்ளது. இது குறித்து, லாலாப்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.மொபட் மீது பஸ் மோதி வாலிபர் பரிதாப பலிகரூர், அக். 10கரூர் அருகே வாங்கல் பகுதியை சேர்ந்தவர் செல்லப்பன், 47. இவர், கரூரில் இருந்து மோகனுார் செல்லும் சாலையில், நேற்று மொபட்டில் சென்று கொண்டு இருந்தார். அப்போது, எதிரே வந்த அரசு பஸ், மொபட் மீது மோதியதில் நிலை தடுமாறி விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த செல்லப்பன் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். விபத்து குறித்து, வாங்கல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை