உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / குளித்தலை அருகே குண்டாஸில் ரவுடி கைது

குளித்தலை அருகே குண்டாஸில் ரவுடி கைது

கரூர், குளித்தலை அருகே, பல்வேறு வழக்கில் சிக்கிய ரவுடியை போலீசார் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.குளித்தலை அருகில், நங்கவரம் தெற்கு மாடு விழுந்தான் பாறையை சேர்ந்த ராஜாவுக்கும், அதே பகுதியை சேர்ந்த உறவினர் முருகானந்தம், 38, என்பவருக்கும் இடையே கொடுக்கல் வாங்கல் பிரச்னை இருந்தது. கடந்த ஜூலை, 27ல் ராஜாவின் தந்தை செல்வராஜின், இடது வயிற்றில் கத்தியால் குத்தினார். நங்கவரம் போலீசார் வழக்குப்பதிந்து, முருகானந்தத்தை கைது செய்து, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இவர் மீது ஏற்கனவே குளித்தலை, லாலாபேட்டை, நங்கவரம், திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை ஆகிய போலீஸ் ஸ்டேஷன்களில், 6 வழக்குகள் நிலுவையில் உள்ளன.எனவே, அவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய, கரூர் எஸ்.பி., ஜோஷ் தங்கையா, கலெக்டர் தங்கவேலுவுக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து, குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய, கலெக்டர் உத்தரவிட்டார். திருச்சி மத்திய சிறையில் உள்ள, முருகானந்தத்திடம் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதற்கான நகலை, நங்கவரம் போலீசார் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை