உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கிராமப்புற இளைஞர்கள் 3 மாத சான்றிதழ் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

கிராமப்புற இளைஞர்கள் 3 மாத சான்றிதழ் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

கரூர், அக். 9கிராமப்புற இளைஞர்கள், மூன்று மாத சான்றிதழ் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: கரூர் மாவட்டத்தில், மாநில ஊரக வளர்ச்சித்துறை சார்பில் மாவட்ட அளவில் கிராமப்புற இளைஞர்களுக்கு மூன்று மாத சான்றிதழ் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம். பயிற்சியில் கலந்துகொள்ள குறைந்தபட்சம் பிளஸ் 2 முடித்து, தன்னார்வலர்களாக உள்ள கிராமப்புற இளைஞர்களுக்கு, மூன்று மாத கால பயிற்சி வழங்கப்படவுள்ளது. பயிற்சியில் சேர கட்டணமாக, 1,000 ரூபாய் இணையதளம் வாயிலாக செலுத்தப்பட வேண்டும். கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தில் இணைந்து பயிற்சிக்கான சான்றிதழ் வழங்கப்படும். https://forms.eduqfix.com/certificate/add என்ற இணையதள வாயிலாக பதிவுகள் செய்யலாம். மேலும் விபரங்களுக்கு கரூர் மாவட்ட பஞ்., வள மைய அலுவலர் கார்த்திக்கேயனை-90801 61414 - என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ