உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மணல் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல்

மணல் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல்

குளித்தலை:குளித்தலை அடுத்த திருச்சி-கருர் தேசிய நெடுஞ்சாலையில், மருதுார் சோதனை சாவடியில், குளித்தலை எஸ்.ஐ., மாரிமுத்து மற்றும் போலீசார், வாகன சோதனையில் ஈடு-பட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த டிப்பர் லாரியை நிறுத்தி சோதனையிட்டனர். அதில், சட்டத்துக்கு விரோதமாக, மூன்று யூனிட் மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. விசாரணையில், கரூர் மாவட்டம், மண்மங்கலம், நேதாஜி நகரை சேர்ந்த லாரி டிரைவர் மதிவாணன், 44, என்பது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார், டிப்பர் லாரியை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி