உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / காவிரியில் மணல் கடத்தல் சரக்கு வாகனம் பறிமுதல்

காவிரியில் மணல் கடத்தல் சரக்கு வாகனம் பறிமுதல்

குளித்தலை: ராஜேந்திரம் காவிரி ஆற்றில் இருந்து மணல் கடத்திய சரக்கு வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.குளித்தலை, வதியம், நாப்பாளையம், பெரியபாலம், தண்ணீர்பள்ளி, ராஜேந்திரம், மருதுார் காவிரி ஆற்றில் இரவு நேரங்களில், லாரிகள் மூலம் மணல் கடத்தப்பட்டு வருவதாக, கலெக்டருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, குளித்தலை ஆர்.டி.ஓ., தனலட்சுமி தலைமையில் வருவாய் துறையினர் நேற்று அதிகாலை, ராஜேந்திரம் காவிரி ஆற்றில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது, 407 மகேந்திரா சரக்கு வாகனத்தில் சிலர் மணல் கடத்திக் கொண்டு இருந்தனர். வருவாய் துறையினரை பார்த்ததும், மணல் கடத்துபவர்கள், வாகனத்தின் டிரைவர் ஆகியோர் அங்கிருந்து தப்பினர். சரக்கு வாகனத்தை ஆர்.டி.ஓ., பறிமுதல் செய்து, குளித்தலை போலீசில் ஒப்படைத்தார்.இதுகுறித்து ஆர்.ஐ., ஸ்ரீவித்யா கொடுத்த புகார்படி, போலீசார் வழக்கு பதிவு செய்து, மணல் கடத்தலுக்கு சம்மந்தப்பட்ட நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதையடுத்து, பறிமுதல் செய்யப்பட்ட சரக்கு வாகனம், மருதுார் சோதனை சாவடியில் நிறுத்தப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ