உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மணல் கடத்தல்: 4 பேர் மீது வழக்கு

மணல் கடத்தல்: 4 பேர் மீது வழக்கு

கரூர்: வெள்ளியணை அருகே, டாரஸ் லாரியில் மணலை கடத்திய-தாக, நான்கு பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.கரூர் மாவட்டம், வெள்ளியணை போலீஸ் எஸ்.ஐ., சசிகலா உள்ளிட்ட போலீசார், நேற்று முன்தினம் லிங்கத்துார் பகுதியில், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, டாரஸ் லாரியில் நான்கு யூனிட் ஆற்று மணலை கடத்தி, மணல் சலிப்பகத்தில் நிறுத்தப்பட்டிருந்தது. விசாரணையில், டாரஸ் லாரி உரிமையாளர் மதியழகன், 37, மணல் சலிப்பக உரிமையாளர் தயாநிதி, 51, லாரி டிரைவர்கள் சூர்யா, 33, சண்முகம், 40, ஆகியோர் மீது, வெள்ளியணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்-றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை