மேலும் செய்திகள்
மணல் கடத்திய இருவர் கைது
23-Oct-2024
கரூர்: கரூர் மாவட்டம், நஞ்சை கடம்பங்குறிச்சி வி.ஏ.ஓ., சக்திவேல், 59; இவர், நேற்று முன்தினம், காவிரியாற்று பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, காவிரியாற்றில் இருந்து, ஐந்து யூனிட் மணல் கடத்தியதாக செல்வராஜ், 49, அவரது மகன் பாரத் ராஜ், 23, நந்தகுமார், 26, ஆகியோர் மீது, வி.ஏ.ஓ., சக்திவேல் போலீசில் புகாரளித்தார்.இதையடுத்து, வாங்கல் போலீசார் செல்வராஜ், அவரது மகன் பாரத் ராஜ் ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள நந்தகுமாரை போலீசார் தேடி வருகின்றனர். மேலும், மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட டிராக்டர், டிப்பர் லாரி ஆகியவற்றையும், போலீசார் பறிமுதல் செய்தனர்.
23-Oct-2024