டாரஸ் லாரியில் மணல் கடத்தல் குளித்தலை போலீசாரிடம் ஒப்படைப்பு
குளித்தலை :நான்கு யூனிட் மணலுடன் சந்தேகம் அளிக்கும் வகையில் நின்றிருந்த, டாரஸ் லாரி பறிமுதல் செய்யப்பட்டு, குளித்தலை போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.குளித்தலை அடுத்த, மருதுார்-திருச்சி தேசிய நெடுஞ்சாலை பிரிவு சாலையில், நேற்று முன்தினம் இரவு 7:00 மணியளவில் சந்தேகத்திற்கு இடமாக, 4 யூனிட் மணலுடன் டாரஸ் லாரி நின்று கொண்டிருந்தது. இது குறித்து வி.ஏ.ஓ., குமரேசன், லாரி டிரைவரிடம் கேட்டபோது முரண்பட்ட கருத்துகளை தெரிவித்தார்.இதையடுத்து டாரஸ் லாரியை பறிமுதல் செய்து, குளித்தலை போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தார். 4 யூனிட் மணல் லோடுடன் சந்தேகம் அளிக்கும் வகையில், நின்றிருந்ததாக டாரஸ் லாரி டிரைவரிடம் குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.