உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூர் மாவட்டத்தில் நாளை துாய்மை பணியாளர் முகாம்

கரூர் மாவட்டத்தில் நாளை துாய்மை பணியாளர் முகாம்

கரூர்:துாய்மை பணியாளர்கள் சிறப்பு முகாம் நாளை முதல் நடக்கிறது என, கலெக்டர் முத்துக்குமரன் தெரிவித்துள்ளார்.இது, குறித்து, அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:கரூர் மாவட்டத்தில் தாட்கோ சார்பில், தமிழ்நாடு துாய்மை பணியாளர்கள் நல வாரியத்தில் விடுபட்ட மற்றும் புதிய தற்காலிக பணியாளர்களை உறுப்பினர்களாக பதிவு செய்வது, நலத் திட்டங்களை பெற விண்ணப்பங்களை பெற சிறப்பு முகாம் நாளை முதல் நடக்கிறது. இதில், நாளை (25ம் தேதி )குளித்தலை தாலுகா அலுவலகம், ஆக., 1ல் கரூர் தாலுகா அலுவலகம், ஆக., 8ல் அரவக்குறிச்சி, மண்மங்கலம் தாலுகா, 16ல், புகழூர், மண்மங்கலம் தாலுகா அலுவலகத்தில் சிறப்பு முகாம் நடக்கிறது. ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, வங்கி கணக்கு புத்தகம், பணியாளர் அடையாள அட்டை அல்லது பணிச்சான்று, புகைப்படம் ஆகிய அசல் மற்றும் நகல் ஆவணங்களுடன் பதிவு செய்து கொள்ளலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ