உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி துாய்மை பணியாளர் சங்கம் மனு

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி துாய்மை பணியாளர் சங்கம் மனு

கரூர், ஊதிய உயர்வு உள்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, தமிழ்நாடு கிராம மேல்நிலை தொட்டி இயக்குபவர்கள், துாய்மை பணியாளர்கள் சங்க மாவட்ட தலைவர் வீராச்சாமி தலைமையில், கரூர் கலெக்டரிடம் மனு அளித்தனர்.அதில், கூறியிருப்பதாவது:கரூர் மாவட்டத்தில் கிராம பஞ்.,ல், பணிபுரியும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, மின் மோட்டார் இயக்குபவர்கள், துாய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அவர்களுக்கு, 7 வது சம்பள கமிஷன்படி ஊதியம் வழங்க வேண்டும். துாய்மை பணியாளர்களுக்கு காப்பீடு தொகை பிடித்தம் செய்யப்பட்டாலும், அதற்குரிய காப்பீடு அட்டை வழங்கப்படவில்லை. துாய்மை பணியாளர்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும். அனைவருக்கும் அடையாள அட்டை வழங்க வேண்டும்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை