பள்ளப்பட்டியில் துாய்மை பணியாளர்கள் கூட்டம்
அரவக்குறிச்சி :பள்ளப்பட்டி நகராட்சியில் பணிபுரியும் துாய்மை பணியாளர்களை, மனிதர்களாக நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி, கோரிக்கை விளக்க கூட்டம் நேற்று நடந்தது.சங்க மாவட்ட தலைவர் முருகேசன் பங்கேற்றார். துாய்மை பணியாளர்களுக்கு, ஒரு நேரம் வேளையாக காலை 6:00 மணி முதல் 2:00 மணி வரை உணவு வழங்க வேண்டும்பழுதடைந்த குப்பை வாகனங்களை சரி செய்து வழங்க வேண்டும், துாய்மை பணியாளர்களுக்கு குப்பை அள்ளும் பணி தவிர இதர வேலைகளை செய்ய கட்டாயப்படுத்தக் கூடாது. தரக்குறைவாக பேசுவதை கைவிட வேண்டும். தினக்கூலியாக 760 ரூபாய் ஊதியம் வழங்க வேண்டும்.தொழிலாளர் வைப்பு நிதி மற்றும் இ.எஸ்.ஐ., முறையாக செலுத்தப்பட்ட கணக்கு விபரம் அளிக்கப்பட வேண்டும், மாத ஊதியம் பிரதி மாதம் 5ம் தேதிக்குள் வழங்க வேண்டும். துாய்மை பணிக்கு தேவையான உபகரணங்கள் வழங்க வேண்டும் உள்ளிட்ட, 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோரிக்கை கூட்டம் நடைபெற்றது.சி.ஐ.டி.யு., மாவட்ட தலைவர் ராஜா முஹம்மது, மாவட்ட பொருளாளர் கணேசன், அரவக்குறிச்சி ஒன்றிய செயலாளர் ஆறுமுகம் மற்றும் நிர்வாகிகள் அன்னக்கொடி நாகராஜ், முருகன், காந்தி மற்றும் துாய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.