உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூர் மாநகராட்சி ஆபீசில் துாய்மை பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கரூர் மாநகராட்சி ஆபீசில் துாய்மை பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கரூர்: கரூர் மாநகராட்சி அலுவலக வளாகத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கம் (சி.ஐ.டி.யு.) சார்பில் உள்ளிருப்பு போராட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். மாநகராட்சியில், 48 வார்டுகள் உள்ளன. இதில் நாள்தோறும் பணியாளர்கள் துாய்மை பணி மேற்கொண்டு வருகின்றனர். அவர்களுக்கு பணிச்சுமை அதிகம் உள்ளது. ஒப்பந்த துாய்மை பணியாளர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை விடுமுறை அளிக்க வேண்டும். இல்லையென்றால் ஞாயிற்றுக்கிழமை வேலைக்கு வருபவர்களுக்கு இரு மடங்கு சம்பளம் வழங்க வேண்டும். 12 மணி நேரத்திற்கு மேலாக வேலை வாங்குவதை குறைக்க வேண்டும். மாநகராட்சி குப்பை கிடங்கில் குப்பையை தலையில் சுமந்து செல்வதை நிறுத்தி, வாகன வசதி ஏற்பாடு செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, 50 ஒப்பந்த துாய்மை பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநகராட்சி மேயர் கவிதா, பணியாளர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். கோரிக்கைகளை மனுவாக எழுதி கொடுத்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்தரவாதம் கொடுப்பதன் அடிப்படையில், துாய்மை பணியாளர்கள் மீண்டும் பணிக்கு சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி