கொசு ஒழிப்பு பணியில் துாய்மை பணியாளர்கள்
கிருஷ்ணராயபுரம்:சிவாயம் பஞ்சாயத்தில், கொசு ஒழிப்பு பணி நடந்தது.கிருஷ்ணராயபுரம் அடுத்த சிவாயம் பஞ்சாயத்து வார்டுகளில், நேற்று கொசு ஒழிப்பு பணி நடந்தது. மக்கள் குடியிருப்பு இடங்களில் தேங்கியிருந்த மழைநீர் அகற்றப்பட்டது. பழைய பிளாஸ்டிக் பொருட்கள், டயர்கள் அப்புறப்படுத்தப்பட்டன. நல்ல குடிநீர் மூடி வைத்தல், கழிவுநீர் செல்லும் வழித்தடங்களில் துாய்மை பணி செய்யப்பட்ட பின், பிளீச்சிங் பவுடர் தெளித்தல் பணி மேற்கொள்ளப்பட்டது. இப்பணியில், பொது சுகாதாரத்துறையை சேர்ந்த மஸ்துார் பணியாளர்கள் ஈடுபட்டனர்.