மேலும் செய்திகள்
தாலுகா அலுவலகங்களில் ஜமாபந்தி முகாம் துவக்கம்
22-May-2025
குளித்தலை,குளித்தலை தாலுகா அலுவலகத்தில், நேற்று ஜமாபந்தி நிகழ்ச்சி நடந்தது. சப்-கலெக்டர் சுவாதி ஸ்ரீ தலைமை வகித்தார். நேர்முக உதவியாளர் மகுடேஸ்வரன், தாசில்தார் இந்துமதி, தனி துணை தாசில்தார்கள வெங்கடேசன், மகாமுனி மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் முன்னிலையில், நங்கவரம் குறு வட்ட வருவாய் கிராம பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை வழங்கினர்.இதை பெற்றுக் கொண்ட சப்-கலெக்டர் சுவாதி ஸ்ரீ, விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். ஆர்.ஐ..பானுமதி மற்றும் வருவாய் துறை அலுவலர்கள், பணியாளர்கள், பொது மக்கள் கலந்து கொண்டனர். மனுக்கள் அளிக்க வந்த மக்களுக்கு, சப்-கலெக்டர் சுவாதிஸ்ரீ மரக்கன்றுகளை இலவசமாக வழங்கினார்.
22-May-2025